பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்
பணியிடங்கள்: மொத்தம்- 92.
1. Deputy Collector: 18 : தகுதி: ஏதேனும் ஒரு பட்டம்
2. DSP: 26 : ஏதேனும் ஒரு பட்டம். உடல் திறனுக்காக தேசிய அவார்டுகள் பெற்றிருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. Assistant Commissioner: 25. தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். வணிகவியல் மற்றும் சட்டம் பாடத்தில் பட்டப்படிப்பும், வரிச் சட்டங்களில் டிப்ளமோ படித்தவர்களுக்கு முதல் முன்னுரிமையும், வணிகவியல் மற்றும் சட்டத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 2வது முன்னுரிமையும், வணிகவியல் அல்லது சட்டத்தில் பட்டப்படிப்பும், வரிச்சட்டங்களில் டிப்ளமோவும் படித்தவர்களுக்கு 3வது முன்னுரிமையும், வணிகவியல் அல்லது சட்டத்தில் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 4வது முன்னுரிமையும் அளிக்கப்படும்.
4. Deputy Registrar of Co-operative Societies: 13. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு.
5. Assistant Director of Rural Development: 7. தகுதி: ஏதேனும் ஒரு பட்டம். மதுரை மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம ஊரக சேவை மையத்தில், ஊரக சேவை பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது ஊரக சேவை பாடத்தில் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ அல்லது சமூகவியல் பாடத்தில் முதுநிலை பட்டம் அல்லது டிப்ளமோ படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
6. District Employment Officer: 3. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு. பொருளியல்/கல்வியியல்/சமூகவியல்/புள்ளியியல்/ உளவியல் ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கும் சமூக அறிவியல் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ மற்றும் முன்அனுபவம் பெற்றவர்களுக்கும், தொழில் அல்லது பெர்சனல் ேமனேஜ்மென்ட் அல்லது தொழிலாளர் நலன் ஆகிய துறைகளில் முன்அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.56,100- 2,05,700.
பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்துக் கொண்டிருப்பவர்களும் குரூப்- 2 முதல்நிலை தேர்வுக்கு (Preliminary Exam) விண்ணப்பிக்கலாம். பிரதான தேர்வுக்கு (Main Exam) விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு தேர்ச்சி சான்றிதழ் நகலை இணைக்க வேண்டும்.
வயது: உதவி கமிஷனர் பணி தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் 1.7.22 அன்று பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 34க்குள். (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 39க்குள் இருக்க வேண்டும்).
உதவி கமிஷனர் (வணிக வரிகள்)
1. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு: பொதுப்பிரிவினர் 21 முதல் 34க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 39க்குள்இருக்க வேண்டும்.
2. பி.எல். முடித்தவர்களுக்கு: பொதுப்பிரிவினருக்கு 21 முதல் 35க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 40க்குள் இருக்க வேண்டும்.
கட்டணம்: டிஎன்பிஎஸ்சி அனைத்து தேர்வுகளுக்கும் பதிவு செய்வதற்கு ஒருமுறையிலான பதிவுக் கட்டணம் ரூ.150. இது அனைவருக்கும் பொதுவானதாகும்.
இடஒதுக்கீட்டு பிரிவுகளைச் சேர்ந்த பட்டப்படிப்பு படித்தவர்கள் 3 முறை தேர்வுக் கட்டண விலக்கை பெறலாம். அதன் பின்னர் தேர்வுக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
தேர்வுக் கட்டணம் எவ்வளவு என்பதை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். முதல்நிலை தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2022.