ஐடிஐ டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
தமிழக அரசின் நகர திட்டமிடல் துறை (Town Planning) மற்றும் நில அளவை துறை (Survey and Land Records)யில் 1089 இடங்கள் காலியாக உள்ளன.
பணியிடங்கள்
1. Field Surveyor: 798 இடங்கள். சம்பளம்: ₹19,500- 71,900. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது சர்வேயர் பணிக்கான ஐடிஐ டிரேடு சான்றிதழ் அல்லது சென்னை இன்ஜினியரிங் குழுவால் வழங்கப்பட்ட ராணுவ டிரேடு சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. Draftsman: 236 இடங்கள். சம்பளம்: ₹19,500-71,900. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது சிவில் டிராப்டஸ்மேன் டிரேடில் ஐடிஐ அல்லது சென்னை இன்ஜினியரிங் குழுவால் வழங்கப்பட்ட ராணுவ டிரேடு டிராப்ட்ஸ்மேன் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
3. Surveyor cum Assistant Draughtsman: 55 இடங்கள். சம்பளம்: ₹19,500-71,900. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ அல்லது சிவில் டிராப்ட்ஸ்மேன்ஷிப் படிப்பில் ஐடிஐ அல்லது ஏதாவதொரு சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.7.2022 அன்று பொது பிரிவினருக்கு 32க்குள். தமிழக அரசால் வழங்கப்பட்ட Field Surveyor and Draughtsman பயிற்சி பெற்றிருக்கும் பொது பிரிவினருக்கு 5 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.
கட்டணம்: பதிவுக் கட்டணம் ₹150, தேர்வுக் கட்டணம் ₹100. இதை ஆன்லைனில் செலுத்தவும். ஏற்கனவே பதிவுக் கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் செலுத்த வேண்டியதில்லை.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.8.2022.