பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உலர் பழங்களில் அனைத்து வகை சத்துகளையும் கொண்டது பேரீச்சம்பழம்.
இதில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரோட்டின், பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மாங்கனீசு, இரும்புச்சத்து, வைட்டமின் பி6 உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன.
நாள் ஒன்றுக்கு குறைந்தது 5 பேரீச்சைகளை(அல்லது 100 கிராம்) சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
► பேரீச்சம்பழம் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்சிடன்ட். அந்தவகையில், உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
► குடல் பகுதியில் உள்ள கெட்ட கொழுப்புகளைக் குறைக்கிறது.
► உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது.
► பேரீச்சையில் வைட்டமின் ஏ அதிக அளவில் இருப்பதால் இது கண் பார்வைக்கும் அவசியமானது.
► ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைத்து சரியான அளவில் இருக்க வழிவகை செய்யும்.
► கர்ப்பிணி பெண்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து உணவு. கருப்பையில் ஏற்படும் கோளாறுகளை சரிசெய்கிறது.
► குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை பகுதிகளில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வழி செய்கிறது.
► எலும்புகளையும் பற்களையும் பலப்படுத்துகிறது. ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
► சருமம் பொலிவடைய உதவுகிறது.
► உடல் எடை குறைய டயட்டில் இருப்பவர்கள் உலர் பழங்களில் கண்டிப்பாக பேரீச்சையை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதையும் படிக்க | 11 வயதுக்குள்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது சரியா?
நன்றி Dinamani