ஒன்றிய அரசின் நிலத்தடி நீர் வா




ஒன்றிய அரசின் ஜல்சக்தி அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒன்றிய நிலத்தடி நீர் வாரியத்தில் 26 கார் டிரைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணி: ஸ்டாப் கார் டிரைவர்.

மொத்த இடங்கள்: 26 (பொது-9, பொருளாதார பிற்பட்டோர்-7, ஒபிசி-4, எஸ்சி-6). இவற்றில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

வயது: 22.9.2022 அன்று 18 முதல் 27க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி: மெட்ரிகுலேசன் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். டிரைவிங்கில் 3 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மோட்டார் மெக்கானிசம் தெரிந்திருக்க வேண்டும். இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.cgwb.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.9.2022.





நன்றி Amarujala

(Visited 10037 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 9 =