இந்திய விமானநிலையங்கள் ஆணையத்த




இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் காலியாக உள்ள 156 சீனியர், ஜூனியர் அசிஸ்டென்ட் காலியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1.    Junior Assistant (Fire Service): 132 இடங்கள்

(பொது-88, பொருளாதார பிற்பட்டோர்- 13, ஓபிசி- 11, எஸ்சி-20).

சம்பளம்: ரூ.31,000- 92,000.

தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மெக்கானிக்கல்/ஆட்டோமொபைல்/பயர் பிரிவில் 50% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ. மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமை பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம்- ஆண்கள்- 167 செ.மீ., மற்றும் பெண்கள் 157 செ.மீ., எடை- ஆண்கள்: 55 கிலோ, பெண்கள்: 45 கிலோ. மார்பளவு: ஆண்களுக்கு விரிவடையாத நிலையில் 81 செ.மீ., விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., மேலும் நல்ல பார்வைத் திறன் உடையவராக இருக்க வேண்டும்.

2.    Junior Assistant (Office): 10 இடங்கள்

(பொது-5, பொருளாதார பிற்பட்டோர்- 1, ஓபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1)

சம்பளம்: ரூ.31,000- 92,000.

தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் 30 வார்த்தைகள், இந்தியில் 25 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3.     Senior Assistant (Accounts): 13 இடங்கள்.

(பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஓபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1).

சம்பளம்: ரூ.36,000- 1,10,000.

தகுதி: பி.காம் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 6 மாத கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற சான்றிதழ் இருக்க வேண்டும். இரண்டு வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

4.     Senior Assistant : 1 இடம் (எஸ்சி).

சம்பளம்: ரூ.36,000- 1,10,000.

தகுதி: இந்தியுடன் ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்துடன் இந்தி மொழியில் முதுகலைப் பட்டம் தேர்ச்சியுடன் 2 வருட பணி அனுபவம்.

வயது: மேற்குறிப்பிட்ட அனைத்துப் பணிகளுக்கும் 18 லிருந்து 30க்குள். எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: ரூ.1000/- இதை ஆன்லைனில் செலுத்தவும். எஸ்சி/எஸ்டி/பெண்கள்/ மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது. மேலும் அனைத்து பிரிவினர்களும் கொரோனா பரிசோதனை கட்டணமாக ரூ.90/- செலுத்த வேண்டும். www.aai.aero என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 30.09.2022.





நன்றி Amarujala

(Visited 10019 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + four =