தமிழ்நாடு அரசின் புள்ளியியல் துறையில் உதவி புள்ளியியல் ஆய்வாளர் மற்றும் புள்ளியியல் தொகுப்பாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் விவரம்:1. Assistant Statistical Investigator: 211 இடங்கள். சம்பளம்: ரூ.20,600- 75,900. தகுதி: புள்ளியியல் பாடத்தில் இளநிலை பட்டம் அல்லது புள்ளியியலை ஒரு பாடமாகக் கொண்டு கணிதம், கம்ப்யூட்டர் அறிவியல், பொருளாதாரம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் ஆகிய பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டம்.2. Statistical Compiler: 1 இடம். சம்பளம்: ரூ.19,500-71,900. தகுதி: புள்ளியியல் பாடத்தில் இளநிலை பட்டம்.3. Computer: 5 இடங்கள். சம்பளம்: ரூ.19,500-71,900. தகுதி: புள்ளியியல் அல்லது பயோஸ்டேட்டிக்ஸ் பாடத்தில் இளநிலை பட்டம்வயது: 1.7.2022 தேதியின்படி 32 வயதுக்குள். எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/மிகவும் பிற்பட்டோர்/பிற்பட்டோர்/ முஸ்லிம் ஆகியோருக்கு உச்சவயது வரம்பு கிடையாது.டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.தேர்வுக் கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைன் முறையில் செலுத்தவும். இணையதளத்தில் ஒன் டைம் ரிஜிஸ்டிரேஷன் முறையில் ஏற்கனவே பதிவு செய்யாதவர்கள் ரூ.150 செலுத்தி பதிவு செய்து கொள்ளவும்.www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.10.2022.