மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 459 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Assistant Sub-Inspector (ASI): 104 இடங்கள் (ஆண்கள்-94, பெண்கள்-10). சம்பளம்: ரூ.29,200- ரூ.92,300. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதி, அதை நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்
2. Head Constable (Ministerial): 355 இடங்கள் (ஆண்கள்-319, பெண்கள்-36). சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: ஆண்கள்- குறைந்த பட்சம் 165 செ.மீ உயரம். பெண்கள் 155 செ.மீ., (எஸ்டி பிரிவு ஆண்கள் 162.5 செ.மீ, பெண்கள்-150 செ.மீ).
மார்பளவு: ஆண்கள்- சாதாரண நிலையில் 77 செ.மீ, விரிவடைந்த நிலையில் 82 செ.மீ (எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீ).
கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
www.cisfrectt.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.10.2022.