இந்திய ராணுவத்தில் 128 மத போதகர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியான ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Religious Teacher (Junior Commissioned Officer) (PRT Course).
மொத்த காலியிடங்கள்: 128
1. Pandit, Pandit (Gorkha), Granthi: 121 இடங்கள். தகுதி: இந்து மத போதகர் பணிக்கேற்ற வகையில் சம்ஸ்கிருத மொழியில் ஆச்சார்யா பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கரம் கந்த் சமய பாடப்பிரிவில் ஒரு வருட டிப்ளமோ முடித்து சாஸ்திரி தகுதி பெற்றிருக்க வேண்டும்.
2. Maulvi (Sunni), (Shia): 4 இடங்கள். தகுதி: முஸ்லிம் மதகுரு பணிக்குரிய அரபிக்கில் மவுலவி ஆலிம் அல்லது உருதுவில் அடிப் ஆலிம் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
3. Bodh Monk (Mahayana): 1 இடம். தகுதி: புத்த மத ஆசிரியர் பணிக்கான தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது: 25 முதல் 36க்குள்.
உடற்தகுதி: உயரம்- 160 செ.மீ., மார்பளவு- 77 செ.மீ., உடல் எடை- 50 கிலோ.
உடல் திறன் தகுதிகள்: 8 நிமிடங்களில் 1.6 கி.மீ., தூரத்தை ஓடி முடிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். இறுதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 6 வார அடிப்படை ராணுவ பயிற்சியும், 11 வாரம் மத போதகர் பணிக்கான பயிற்சியும் வழங்கப்படும். பின்னர் ராணுவத்தில் ஜூனியர் கமிஷன்டு ஆபீசர் அந்தஸ்தில் மத போதகர் பணி வழங்கப்படும்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.11.2022.