அலுவல் சாரா உறுப்பினர் பதவி

ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் திருப்பத்தூர், நவ.4: ஆதரவற்ற மகளிர் அலுவல் சாரா உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆதரவற்ற பெண்கள் சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ்வதற்காக கைம்பெண்கள் மற் றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாரியத்தில் அலுவல் சாரா உறுப்பினர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். அதன்படி, கைம்பெண்கள் பிரதிநிதிகள்-4, பெண் கல்வி யாளர்கள்-2, பெண் தொழில் முனைவோர்கள்-2, பெண் விரு தாளார்கள்-2, தன்னார்வத் தொண்டு நிறுவன பெண் பிரதி நிதிகள்-4 பேர் என்ற முறையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்தப் பதவிகளுக்கு அமர்வுக் கட்டணம், பயணப்படி மட்டுமே வழங்கப்படும். விருப் பமுள்ள பெண்கள் ‘மாவட்ட சமூக நல அலுவலகம், பி-பி ளாக், முதல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருப்பத்தூர்’ என்ற முகவரி யில் விண்ணப்பத்தைப் பெற்று, நிறைவு செய்து நவ. 7-ஆம் தேதிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 10036 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + thirteen =