ஒரு நாள் தேனீ வளர்ப்புப் பயிற்சி

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நாளை தேனீ வளர்ப்புப் பயிற்சி கோவை, நவ. 5: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் தேனீ வளர்ப்புப் பயிற்சி திங்கள்கிழமை (நவம்பர் 7) நடைபெறுகிறது.

இது தொடர்பாக வேளாண் பூச்சியியல் துறை கூறியிருப்பதாவது: பூச்சியியல் துறை சார்பில் மாதந்தோறும் தேனீ வளர்ப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. நவம்பர் மாதத்துக்கான பயிற்சி 7 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

இதில், தேனீ இனங்களை கண்டுபிடித்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள், மகரந்தச் சேர்க்கை மூலம் மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள், நோய் நிர்வாகம் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு 0422 – 6611214 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

(Visited 10034 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − 1 =