தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

ராணிப்பேட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 11, 25-ந் தேதிகளில் நடக்கிறது.

ராணிப்பேட்டை, நவ.7- தமிழக அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்களான அனைத்து மாவட்ட வேலைவாய்ப்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் வருகிற 11-ந் தேதி மற்றும் 25-ந் தேதி ஆகிய 2 நாட்களில் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இதில் பல தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2, பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ.,டிப்ளமோ மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

மேற்காணும் கல்வித்தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் முகாம் அன்று காலை 10 மணிக்கு ராணிப்பேட்டைமாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இந்த முகாமில் பணி நியமன ஆணை பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித் துள்ளார்.

(Visited 10037 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × two =