ஜோதிடம் ஒரு முன் எச்சரிக்கையா, முடிவா?




                                                                                             

ஜோதிடம் என்பது ஒரு முன்னெச்சரிக்கையே தவிர, அது கூறும் விஷயங்களை/ தகவல்களை / எச்சரிக்கைகளை பயமுறுத்தவோ, பயந்து ஓடவோ, கதறி அழவோ இல்லை என்பதனை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஏன்னெனில், ஜோதிடம் ஒரு முடிவானது அல்ல, ஜோதிடம் என்பது ஒரு முன்னெச்சரிக்கையே.

ஜோதிட  வரலாற்றை முதலில் தெரிந்து கொள்வோம். பார்வதி பரமசிவனை பார்த்து கேட்டார்கள். படைத்த ஜீவ ராசிகளிலே மானிட பிறவி தான் அதிக  தன்மைகளைக் கொண்டதாகப்  படைக்கப்பட்டுள்ளது. மற்றைய ஜீவ ராசிகள் தமக்கு வரும் நன்மை தீமைகளை அறிய மாட்டாது. அப்படியே அறிந்தாலும் அதற்கேற்ப சூழலையோ, முடிவையோ மாற்ற இயலாது. மானிட வர்க்கத்துக்கு ஏதேனும் ஒரு முன்னெச்சரிக்கை தன்மையை அளித்தால், அதனை ஓரளவு தம்மால், தம்மைக் காக்க முடியுமே என்ற எண்ணத்தால் அன்னை பார்வதியின் கருணையினால் உருவானதே ஜோதிடம் எனும் ஒரு பெரிய சொத்து. 

இதனை யாக்ஞவல்கியர் மற்றும் பராசரர் போன்ற ரிஷிகள் மற்றும் பல முனிபுங்கவர்கள் முன்னிலையில் உருவானதே இந்த அறிய பொக்கிஷமான ஜோதிடம் ஆகும். 

ஜோதிடம்  பற்றி  முன்னதாகவே,  ஒரு மானிடன் அறிந்துகொண்டால் அவனால் பிரச்னைகளை எளிதில் எதிர்கொள்ளவோ அல்லது தற்காத்துக் கொள்ளவோ இயலும். மற்ற உயிரினங்களுக்கு, இது கொஞ்சவும் பொருந்தாது, மின்கம்பி தரையில் விழுந்து கிடந்தால், அதில் மின்சாரம் உள்ளதா இல்லையா என யோசிக்கவும் செய்யாது. அப்படியே அதனைக் கடந்து செல்லும். ஆனால், மனிதர்கள் மட்டும் சிந்திக்கும் திறனால் அந்த இடத்தை விட்டு நகரவோ மற்றவர்களுக்கு எச்சரிக்கவோ செய்வார்கள். 

இதையும் படிக்கலாம்: உ.பி.யில் பெண்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்திய காவலர்கள்: எதற்கு?

அது போல தான் ஜோதிடமும், ஜோதிடத்தால் நமக்கு வரும் பிரச்னைகளை அப்படியே தூக்கி எறியவோ மாற்றவோ முடியாது. நம்மை தற்காத்துக்கொள்ளவும், சந்தர்ப்பத்துக்கேற்ப நிகழ்வுகளைத் தள்ளிப்போடவும், தேவையற்றவைகளை புறம் தள்ளவும் முடியும், நாம் முன்னதாகவே நமக்கு ஏற்படப்போகும், அதாவது நமது கர்மாவினால் எதிர்ப்படும் வினைகளை ஜோதிடம் மூலம் கடக்க முடியும்.
 
உதாரணத்திற்கு ஒரு திருமணம் எனும் விஷயத்தை எடுத்துக்கொள்வோம். திருமண பொருத்தம் பார்த்து திருமணம் செய்விக்கிறார்கள், ஒரு சில நாள்களில், ஒரு சில மாதங்களில் ஏன் ஓரிரு குழந்தை பெற்ற பின்னரும் திருமணப் பந்தத்திலிருந்து விலகுவதை சர்வ சாதாரணமாக தற்போது காண முடிகிறது. 

இரண்டாவது திருமணத்திற்கென்றே சில மாட்ரிமோனியல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கதே. ஏன் இவ்வாறு நடக்கிறது. திருமண பிரிவை குடும்ப நல நீதிமன்றங்களும் நிரம்பி வழிகிறதே. இந்தியன் டிவோர்ஸ் ஆக்ட் 1859 (INDIAN DIVORCE ACT – 1859) படி நிறைய சட்டங்கள் உள்ளது. அதன் கிளை விதிகள் Section 11,12,13 என்றெல்லாம் குறிப்பிட்டு திருமண பிரிவை நியாயப்படுத்த முடிகிறது. இது ஒன்றும் புதியது அல்லது தான். தம்பதியரில் ஒருவர் இறந்து, தனிமையில் அல்லது ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு பராமரிக்க வேறு ஒரு துணை தேடுவதில் நியாயம் இருக்கும். 

ஆனால் இப்போதெல்லாம் திருமணம் ஆன சில நாள்களிலோ / ஆண்டுகளிலோ வேறு ஒரு திருமணத்திற்காக அல்லது பல திருமணம் ஒருவரே செய்து கொள்ளும் நோக்கத்தில் இது போன்றவற்றுக்கு இடமளிக்கும் போது நிச்சயம் சமுதாய ஏமாற்றம் நிகழ்வதைக் காண முடிகிறது.

ராமாயண காலத்தில் இருந்தே சில விதிகளை முன்னிறுத்தியே பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. உதாரணத்திற்கு ஆளத் தகுதி இருந்தும், 14 ஆண்டுகள் வனவாசம் எனச் சொல்லப்பட்டது . அது நடந்தது திரேதாயுகம் அந்த யுக சட்ட திட்டத்தின் படி எந்த ஒரு அரசன் 14 ஆண்டுகள் சிம்மாசனத்தில் அமர வில்லையோ அவன் எப்போதுமே சிம்மாசன அரியணை ஏற தகுதியை இழக்கிறான். ஆம் இதுவே துவாபரயுகத்தில் 13 ஆண்டுகள் ஆயிற்று. அதில் கடுமையான ஒரு கூடுதல் விதி 12 ஆண்டுகள் வனவாசம் அடுத்து ஒரு ஆண்டு கண்ணில் படாமல் வாழ வேண்டிய அஞ்ஞாத வாசமும். இப்போதும் அதே நிலை திருமண பந்தத்திலும் பலவேறு விதிகள் உள்ளது. 

திருமணமே செல்லாது என்பதற்கு பல விஷயங்கள் கையில் எடுக்கப்படுகிறது, ஒன்று Lunatic பைத்தியக்கார நிலை / மன நிலை குன்றிய நிலை, அடுத்து impotancy எனும் ஆண்மை இல்லாமை / இயலாமை  மற்றும் முதல் மனைவி உள்ள போதே இரண்டாவது திருமணம் செய்தல் இவை யாவும் தானாகவே திருமணப் பந்தத்திலிருந்து பிரிவு செய்ய / விடுவிக்க தகுந்த காரணங்கள் ஆகும். அது சரி இப்படியெல்லாம் நடக்கும் என்று ஜோதிடம் முன்னதாகவே அறியப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சரியான ஆண்மை அற்றவர் என்பதனையும், இரு திருமண யோகம் உள்ளவர் என்பதனையும் எளிதாக ஒருவரின் ஜாதகத்தை ஆராய்ந்து கூறிவிட முடியும். ஒருவரின் உயிர் அணுக்களின் எண்ணிக்கை குறைவு மற்றும் வேகம் குறைவு, ஆண்மைக் குறைவு போன்றவற்றை எளிதாக காண இயலும். இதனை சில கிரக இணைவுகளும், தொடர்புகளும் தெள்ளத்தெளிவாக உணர்த்தும். இதனை திருமணத்திற்கு முன்னரே ஒருவரின் ஜாதகத்தினைக்கொண்டு கூறமுடியும். 

படிக்க: நாளை முழு சந்திர கிரகணம்: யாரெல்லாம் பரிகாரம் செய்யவேண்டும்?

ஆனால் வருகிறவர்கள் வெறுமனே நட்சத்திர பொருத்தம் (10) மட்டுமே பார்க்கச் சொல்லி, திருமணத்தை வெகு வேகமாக நடத்தி,  வெகு வேகமாக திருமணப் பந்தத்திலிருந்து விலகியும் விடுவது, எதிர்கால நம் சந்ததியினரை எங்கு கொண்டு செல்லும் என்பதை நினைக்கும் போதே மிகவும் பயமாக உள்ளது. அதே போல் ஒரு பெண்ணின் நடத்தை, அவருக்கு இரு திருமண யோகம் உள்ளதையும், திருமணம் ஆகி செல்லும் வீட்டு அங்கத்தினர்களுடன் பழகும் திறன், ஒதுக்கும் மனப்போக்கு போன்றவற்றையும் ஜோதிடம், ஜாதகத்தின் ஆய்வில் தெரியவரும்.

இவைகளை, முன்கூட்டியே அறிய சரியான ஜோதிடரை நாடுவதோடு, நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்க்காமல் கிரக பொருத்தம், தோஷசாம்யம், இரு திருமணயோகம், குழந்தை பெறும் திறன் ஆணுக்கு உள்ளதா, குழந்தை பெற்று தர பெண்ணுக்கு உடல் சரியாக உள்ளதா, ( ஆண் மலடு உண்டு, பெண் மலடு இல்லை. பெண் பெற்று தரும் நிலை / காலம் வேண்டுமானால் மாற வாய்ப்பு.) தத்து பிள்ளையை தான் வளர்க்கப் போகிறோமா அல்லது வாடகை தாய் மூலம் குழந்தையைப் பெறப்போகிறோமா போன்ற பலவற்றை, திருமணம் செய்து கொள்ளும் முன்னரே பார்த்து அறிந்துகொண்டால், நிச்சயம் தம்பதியினர் வெகு ஆண்டுகள் தமது ஆயுள் காலம் வரை பிரியாமல், தமது குடும்பத்தையும் அரவணைத்து தமது குழந்தைகளையும் ஆரோக்கியமாக, சிறந்த திறமை மிக்கவராக வளர்த்திட ஏதுவாக இருக்க முடியும். 

தொடர்புக்கு : 98407 17857







நன்றி Hindu

(Visited 10019 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 − 2 =