காவல் துறை அறிவிப்பு ஊர்காவல் படையில் ஆள்சேர்ப்பு சேலம் மாநகர காலியாக உள்ள ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்ய காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் : ஆண், பெண் இருபாலரும் 10-வது முடித்திருக்க வேண்டும். 20-வயது முதல் 40-வயது வரை இருக்க வேண்டும்.
சமூக சேவையில் ஈடுபடுபவராக இருத்தல் வேண்டும். எவ்விதமான அரசியல் மற்றும் இதர சங்கங்களை சார்ந்திருத்தல் கூடாது. விண்ணப்பதாரர்கள் எவ்வித குற்ற வழக்குகளில் ஈடுபட்டிருக்க கூடாது. மேலும் இப்பணிக்கு ஊதியம் ஏதும் இல்லை.
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பங்கள் சேலம். வின்சென்ட் ஆயுதப்படை மைதான வளாகத்தில் உள்ள சேலம் மாநகர ஊர்காவல் படை அலுவலகத்தில் 14-11-2022 முதல் 19-11-2022 வரை இலவசமாக வழங்கப்படுகிறது.
அதனை பெற்று 20-11-2022 அன்று மாலை 05.00 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நேரிலோ (அ) தபால் மூலமாகவோ சமர்பிக்கப்பட வேண்டும். மேலும் காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
தொடர்புக்கு: சேலம் மாநகர ஊர்காவல் படை தொலைபேசி எண்கள். 94981-66622, 99429-64403
இப்படிக்கு. வட்டார தளபதி, ஊர்காவல் படை சேலம் மாநகரம்.