தமிழக அரசின் கல்லூரி கல்வி இயக்ககம் வாயிலாக மகளிருக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணி (ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ்.) இலவச பயிற்சி வகுப்புகளை சென்னை ராணி மேரி கல்லூரி மற்றும் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் ஆண்டுதோறும் மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடத்தி வருகின்றது.
இந்தநிலையில் 2022-23-ம் ஆண்டுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதால் ராணி மேரி கல்லூரி மற்றும் ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வலைதளத்தில் கடந்த 14-ந் தேதி முதல் இலவச பயிற்சி வகுப்புக்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கம் செய்து வருகிற 20-ந் தேதிக்குள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரிக்கு அனுப்பி வைக்கவேண்டும்.
விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுத்தேர்வு, நேர்காணல் மற்றும் பயிற்சி வகுப்புகள் தாங்கள் விரும்பி தேர்ந்தெடுக்கும் கல்லூரியிலேயே நடைபெறும்.
விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு, கல்வித்தகுதிகள் மற்றும் தேர்வு சம்பந்தமான 5விவரங்கள் அனைத்தும் விண்ணப்ப படிவத்திலும், ராணி மேரி கல்லூரி (www.queenmaryscollege.edu.in), ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி (www.smgacw.org) வலைதளங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.
மகளிருக்கான குடிமைப்பணி இலவச பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.