தமிழ்நாடு சுகாதாரத் துறையில் ‘ஹெல்த் ஆபீசர்’ பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணி: ‘ஹெல்த் ஆபீசர்’ : 12 இடங்கள்.சம்பளம்: ரூ.56,900-2,09,200. வயது: 37க்குள். தகுதி: எம்பிபிஎஸ் படிப்பை முடித்து, பப்ளிக் ஹெல்த் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மாநில மருத்துவ கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.ஆன்லைன் எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வில் பொது அறிவு, கம்யூனிட்டி மெடிசின் ஆகிய பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். 10ம் வகுப்பு கல்வித் தகுதி அடிப்படையிலான கட்டாய தமிழ்மொழித் தேர்வு நடத்தப்படும்.கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150/-, தேர்வு கட்டணம் ரூ.200/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது.www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.11.2022.
ஹெல்த் ஆபீசர் தேவை
(Visited 10015 times, 31 visits today)