இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு

இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு: விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் சென்னை, நவ. 20: தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகமும் சென்னை, லயோலா கல்லூரியும் இணைந்து ஆறு மாத கால ஊடகவியல் சான்றிதழ் படிப்பை கட்டணமின்றி வழங்குகின் றன.

ஊடகத் துறையில் ஆர்வம் கொண்ட இளம் ஊடகர்களை உருவாக்கும் நோக்குடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் லயோலா கல்லூரியுடன் இணைந்து இந்த முன்முயற்சியை எடுத் துள்ளது.

ஊடகவியலுக்குத் தேவையான கோட்பாடுகளையும் களப்ப யிற்சிகளையும் சரியான விதத்தில் கலந்து தரும் வகையில் பாடத் திட்டம் அமைந்துள்ளது.

வாரந்தோறும் பயிற்சிப் பட்டறைகளும் கள ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. பொருளாதாரம், நிதி, அறிவியல், தொழில் நுட்பம், அரசியல், பண்பாடு, விளையாட்டு, பொழுதுபோக்கு உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளை மாணவர்கள் விருப்பத்திற் கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எழுத்து, ஒளிப்படம், விடியோ, வானொலி, தொலைக்காட்சி, சமூக ஊடகம், கைப்பேசி, ட்ரோன் இதழியல் உள்பட பல்வேறு ஊடகப் பிரிவுகளில் பயிற்றுவிக்கப்படும்.

பட்டப் படிப்பு தேறிய 20 முதல் 25 வயது கொண்ட யாரும் இந் தப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். வாரம் 5 நாள்கள் (திங்கள் முதல் வெள்ளி வரை) சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் தினசரி வகுப்புகள் நடைபெறும். கட்டணமில்லா இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க திங்கள்கி ழமை (நவ.21) இறுதி நாள்.

மேலும், தகவல்களை https://www.loyolacollege.edu/CAJ/home என்ற இணையதளத்திலும், இதற்கு விண்ணப்பிக்க shorturl.at/nsU25 என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.

(Visited 10031 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =