Jobs In Multiple Roles

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் (Tamilnadu Board of Rural Development) gtmhctg உள்ள ஸ்டெனோ, அசிஸ்டென்ட் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

1. Subject Matter Specialist (Horticulture): 1 இடம். வயது: 30க்குள். தகுதி: Horticulture பாடத்தில் முதுநிலை பட்டம். விவசாய விரிவாக்கப் பணி அனுபவம், கம்ப்யூட்டரில் பணி புரிய தெரிந்திருப்பது, விரும்பத்தக்கது.

2. Programme Assistant (Lab Technician): 1 இடம். வயது: 30க்குள். தகுதி: பிஎஸ்சி அக்ரிகல்ச்சர் அல்லது அதற்கு இணையான பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். விவசாய விரிவாக்கப் பணி அனுபவம், கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருப்பது, விரும்பத்தக்கது.

3. Assistant: 1 இடம். வயது: 27க்குள். தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் கணக்குகள் மற்றும் அலுவலக நிர்வாகத் திறமை பெற்றிருக்க வேண்டும்.

4. Stenographer (Grade-III): 1 இடம். வயது: 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்து எழுதி, அதை ஆங்கிலத்தில் 50 நிமிடங்களிலும் அல்லது தமிழில் 65 நிமிடங்களிலும் விரிவாக டைப்பிங் செய்து முடிக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும்.

எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: Subject Matter Specialist பணிக்கு ரூ.500/-, இதர பணிகளுக்கு ரூ.300/-. கட்டணத்தை, ‘‘ Tamilnadu Board of Rural Development’’, Chennai என்ற பெயருக்கு டிடி எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.tnbrdngo.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.11.2022.



நன்றி Amarujala

(Visited 10028 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × two =