
பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா(சிஜிசிஐஎல்) நிறுவனத்தில் காலியாக உள்ள 800 கள பொறியாளர், கள மேற்பார்வையாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பொறியியல் துறையில் சம்பந்தப்பட்ட பிரிவில் பட்டயம், பட்டம் பெற்றவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், இசி, சிஎஸ், ஐடி பிரிவில் பட்டம் பெற்றவர்கள், எலக்ட்ரிக்கல், இசிஇ போன்ற பிரிவில் டிப்ளமோ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்தாரர்கள் 29 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆர்வமும் தகுதியும் உள்ளோர் நவம்பர் 21 முதல் டிசம்பர் 11 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய https://www.powergrid.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.