710 வங்கி அதிகாரிகள் பணியிடங்ள்

பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 710 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப ஐபீபிஎஸ் தேர்வு நடத்தப்பட உள்ளது.

பணி: Specialist Officers

மொத்த இடங்கள்: 710.

வயது: 21.11.22 தேதியின்படி 20-30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: IT Officer: Computer Science/Computer Applications/Information Technology/Electronics/Electrician & Telecommunications/Electronics & Communication/Electronics & Instrumentation Engineering ஆகிய பாடங்களில் இளநிலை/முதுநிலை பட்டம்.

Agricultural Officer: Agriculture/Horticulture/Animal Husbandary/ Veterinary Science/Dairy Science/Fishery Science Pisoiculture/Agri Marketing & Co-operation/Co-operation & Banking/Agro-Forestry/Forestry/Agricultural Bio Technology/Food Science/Agriculture Business Management/Food Technology/Dairy Technology/Agricultural Engineering/Sericulture பாடப்பிரிவுகளில் 4 வருட இளநிலை பட்டம்.

Rajbhasha Adhikari: ஏதேனும் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

Law Officer: எல்எல்பி பட்டம் பெற்று வக்கீலாக பணி புரிந்திருக்க வேண்டும்.

HR/Personnel Officer: Personnel Management/Industrial Relations/HR/HRD/Social work/Labour Law பாடப்பிரிவில் முதுநிலை பட்டம்/முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Marketing Officer: மார்க்கெட்டிங் பாடப்பிரிவில் MMS/MBA/ அல்லது 2 வருட PGDBA/PGDBM/PGPM/PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆன்லைன் எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் எழுத்துத் தேர்வானது, Preliminary & Main என இரு கட்டங்களாக நடைபெறும்.

Preliminary தேர்வு சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், சேலம், தஞ்சை, திருச்சி, நெல்லை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் டிச.24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறும்.

கட்டணம்: ரூ.850/ (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.175). இதை ஆன்லைனில் செலுத்தவும்.

www.ibps.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.11.2022.

(Visited 10034 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − five =