உதவி செவிலியர் பயிற்சி

டிச.12-க்குள் விண்ணப்பிக்கலாம் சென்னை, நவ.30: மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவிகள் டிச.12-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத் துறையின் கட்டுப் பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் 2022-23 ஆண்டுக்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி தொடங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில், சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக் கப்படும். மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஒற்றை சாளர முறையில் சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர் (பொ), தொ.நோ.ம.மனை.எண்.187 திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600 081-இல் உள்ள தொற்று நோய் மருத்துவமனை அலுவலகத்தில் டிச.5 முதல் 11-ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 4 மணி வரை அனைத்து நாள்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை டிச.12-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் அவர்.

VPS  Hosting

(Visited 10020 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 12 =