அமராவதி நகர் சைனிக் பள்ளிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

அமராவதி நகர் சைனிக் பள்ளிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு உடுமலை, டிச. 2: திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 2023-2024-ஆம் கல்வியாண்டில் 6 மற்றும் 9-ஆம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதையொட்டி அகில இந்திய நுழைவுத் தேர்வு 2023-ஆம் ஆண்டு ஜனவரி 8-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

இதற்கு நவம்பர் 30-ஆம் தேதி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் விண்ணப்பிக்கும் கால அவகாசம் தற்போது டிசம்பர் 5-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்தமேலும்விவரங்களை https://aissee.nta.nic.in. ஆகிய இணய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

(Visited 10024 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =