கேந்திர வித்யாலயாவில் 13,404 பணி இடங்கள் .கேந்திர வித்யாலயா பள்ளிகளில் முதல்வர் (239), துணை முதல்வர் (203), முது (3,176), நூலகர் (355), தொடக்க நிலை ஆசிரியர் (6,414), அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர் (156), முதுநிலை உதவி செயலர் (322), இளநிலை உதவி செயலர் (702), ஸ்டெனோகிராபர் கிரேடு-2 (54) உள்பட பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 13 ஆயிரத்து 404 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களுக்கு அதிகபட்சமாக 40 வயதும், பட்டதாரி ஆசிரி யர், நூலகர் பணிக்கு 35 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வும் உண்டு.
எழுத்து தேர்வு, தனித்திறன் தேர்வு, நேர்காணல், ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரி சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 26-12-2022. விண்ணப்பிப் பது பற்றிய விரிவான விவரங்களை http://kvsangathan.nic.in/ என்ற இணையதளத் தில் தெரிந்து கொள்ளலாம்.