ஒன்றிய அரசின் ஜவுளித்துறையின் கீழ் இயங்கும் நெசவாளர் சேவை மையத்தில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பணியிடங்கள் விவரம்:1. Junior Weaver: 6 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-2, எஸ்டி-1).2. Senior Printer: 1 இடம் (பொது).மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கு சம்பளம்: ரூ.29,200- 92,300.3. Junior Printer: 3 இடங்கள் (பொது-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.25,500-81,100.4. Junior Assistant: (Weaving): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.19,900-63,200.5. Attendant (Processing): 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.18,000- 56,900.6. Attendant (Weaving): 10 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1). சம்பளம்: ரூ.18,000-56,900.7. Staff Car Driver: 3 இடங்கள் (பொது-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ.19,900-63,200.விண்ணப்பிக்கும் முறை, மாதிரி விண்ணப்பம், கல்வித்தகுதி, வயது, தேர்ந்தெடுக்கப்படும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.handlooms.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.12.2022.