Job Vaccancies In Steel Authority Of India Limited

ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் 56 மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.பணி: 1. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்: மொத்த இடங்கள்- 51 (பொது-23, ஓபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்- 5). தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் Human Resources/ Personnel Management/Industrial relations/Human Resources & Organisational Development/Production/Operations/Material/Logistics/Supply Chain Management.இதில் ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சி அல்லது சிஏ/சிஎம்ஏ/ஐசிடபிள்யூஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.2. மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் (டெக்னிக்கல்-செராமிக்ஸ்): 5 இடங்கள் (பொது-2, ஓபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1). தகுதி: செராமிக்ஸ் பாடத்தில் 65% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் வயது: 18.12.2022 தேதியின்படி 28க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.சம்பளம்: ₹50,000- 1,60,000.கட்டணம்: பொது/ஓபிசி/ பொருளாதார பிற்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு ₹700/-, எஸ்சி/எஸ்டியினருக்கு ₹200. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஆன்லைன் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.12.2022.

(Visited 10075 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 16 =