தமிழக அரசின் கால்நடைத் துறையில் பணி

தமிழக அரசின் கால்நடைத் துறையில் காலியாக உள்ள 731 Veterinary Assistant Surgeon பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Veterinary Assistant Surgeon.

மொத்த இடங்கள்: 731. சம்பளம்: ரூ.56,100-2,05,700.

வயது: 1.7.2022 தேதியின்படி பொது பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

தகுதி: பி.வி. எஸ்சி அல்லது பி.வி. எஸ்சி மற்றும் ஏ.ஹெச் பட்டம் பெற்றிருக்க வேண்டும். படிப்பை தமிழ்நாடு கால்நடை அறிவியல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150/. தேர்வுக் கட்டணம் ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டணம் கிடையாது. எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.12.2022.

(Visited 10052 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =