இஸ்ரோ நிறுவனத்தில் வேலை விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணபித்து பயனடையலாம்.
பணியின் பெயர்: Assistant(Rajbhasha) காலியிடங்கள்: 7, சம்பள விகிதம்: ரூ.25,500 + HRA வயது வரம்பு : 28.12.2022 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும். எம்பிசி பிரிவினருக்கு 3 வருடங்களும், எஸ்.சி/எஸ்டி பிரிவினர்களுக்கு 5 வருடமும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளநிலை பாடபிரிவில் 60% | மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் அல்லது ஹிந்தியில் தட்டச்சு செய்ய தெரிந்திருந்தால் நல்லது. தேர்ந்தெடுக்கப்படும் முறை : தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் ஸ்கில் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
எழுத்து தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களுரு மற்றும் புது டெல்லி. ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை: அதிகாரபூர்வ இணையத்தளம் வாயிலாக ஆன்லைன் முறையில் 28.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/ கட்டணத்தை முறையில் 30.12.2022 தேதிக்குள் செலுத்தவும். எஸ்.சி, எஸ்.சி, பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப | கட்டணம் கிடையாது. மேலும் விபரங்களுக்கு rmt@isro.gov.in என்கிற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும்.