1,895 கௌரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக நியமிக்க முடிவு சென்னை, டிச. 15: அரசுக் கல்லூரிகளில் 1,895 கெளரவ விரிவுரையாளர் களை தற்காலிகமாக நியமிக்க முடிவு செய்யப்பட்டுள் ளதாக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன் முடிகூறினார்.
தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணி யாற்றும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கலந் தாய்வு இறுதியாக 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன்பின் ஆசிரியர் பற்றாக்குறை உள்பட பல்வேறு காரணங்களால் 4 ஆண்டுகளாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், அரசுக் கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று நிகழாண்டு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இதற்கான வழிகாட்டு நெறிமுறை கள் கடந்த நவ.8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த கலந்தாய்வில் பங்கேற்க இணைய வழியில் 569 பேர் விண்ணப்பித்தனர். தற்போதைய காலிப் பணியிடம் உள்பட பல்வேறு காரணிகளை மையமாகக் கொண்டு அதில் 192 ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்க முடிவானது.
இதற்கான ஆணைகளை அமைச்சர் பொன்முடி, சென்னையில் ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை வழங்கினார். டிச.29-க்குள்…: இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4,000 உதவி பேரா சிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மீதமுள்ள 1,895 காலிப் பணியிடங்களில் மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக கௌரவ விரிவுரையாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, விருப்பமுள்ள பட்டதாரிகள் www.tngasa.in என்ற இணையதளம் வழியாக டிச.29- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் அனைத்தும் மண்டல வாரியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பணிநாடுநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு மதிப்பூதியமாக மாதம் ரூ.20,000 வழங்கப்படும் என்றார் அவர். நிகழ்வில்,உயர்கல்வித் துறைச் செயலர் தா.கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.