மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 287 கான்ஸ்டபிள்(டிரேட்ஸ்மேன்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Constable(Tradesman)1. Constable (Tailor): 18 இடங்கள் (ஆண்கள்-16, பெண்கள்-2).2. Constable (Gardener): 16 இடங்கள் (ஆண்கள்-14, பெண்கள்-2).3. Constable (Cobbler): 31 இடங்கள் (ஆண்கள்-26, பெண்கள்-5).4. Constable (Safai Karamchari): 78 இடங்கள் (ஆண்கள்-67, பெண்கள்-11).5. Constable (Washerman): 89 இடங்கள் (ஆண்கள்-76, பெண்கள்-13).6. Constable (Barber): 55 இடங்கள் (ஆண்கள்-47, பெண்கள்-8).இடஒதுக்கீடு விவரங்களை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 1.1.2022 தேதியின்படி 18 முதல் 23க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: குறைந்த பட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி. சம்பந்தப்பட்ட தொழிற்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் ஐடிஐ அல்லது 2 வருட பணி அனுபவம். Safai Karamachari பணிக்கு 10ம் வகுப்பு மட்டும் படித்திருந்தால் போதும். பணி அனுபவம் தேவை இல்லை.உடற்தகுதி: ஆண்கள்- குறைந்தபட்சம் -170 செ.மீ., உயரம். மார்பளவு சாதாரண நிலையில் 80 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். 5 செ.மீ., விரியும் தன்மை இருக்க வேண்டும்.பெண்கள்- குறைந்தபட்சம் 157 செ.மீ., உயரம் இருக்க வேண்டும்.எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் குறைந்த பட்சம் 162.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீ.,யும், 5 செ.மீ., சுருங்கி, விரியும் தன்மையும் இருக்க வேண்டும்.இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படையால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ சோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்த்தலின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்
.உடற்திறன் தேர்வில் ஆண்கள் 1.6. கி.மீ., தூரத்தை ஆறரை நிமிடங்களிலும், பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 4 நிமிடங்களிலும் ஓடி முடிக்க வேண்டும்.கட்டணம்: ரூ.100/- இதை பொது/ஒபிசி/ பொருளாதார பிற்பட்டோர் பிரிவினர் மட்டும் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினர் ஆகியோருக்கு கட்டணம் கிடையாது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்.www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.12.2022.