நிலக்கரி நிறுவனத்தில் மைனிங் சிர்தார், சர்வேயர் பணி

மத்திய பிரதேசம், சிங்குரேலி மற்றும் உத்தரபிரதேசம், சோனிபத்ரா ஆகிய இடங்களில் உள்ள நிலக்கரி நிறுவனங்களில் மைனிங் சிர்தார், சர்வேயர் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். எஸ்எஸ்எல்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்:1. Mining Sirdar in Technical and Supervisory Grade C : 374 இடங்கள் (பொது- 149, எஸ்சி-55, எஸ்டி-79, ஒபிசி-55). சம்பளம்: ரூ.31,852. தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது மைனிங் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., அல்லது டிப்ளேமா மற்றும் மைனிங் சிர்தார் சான்றிழ், கேஸ் பரிசோதனை சான்றிதழ், முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.2. Surveyor in Technical & Supervisory Grade B: 31 இடங்கள் (பொது-14, பொருளாதார பிற்பட்டோர்-3, எஸ்சி-4, எஸ்டி-6, ஒபிசி-4). தகுதி: மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி மற்றும் சர்வேயர் தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது மைனிங்/மைனிங் சர்வேயிங் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ அல்லது டிப்ளமோ மற்றும் சர்வேயர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.வயது: 22.12.2022 அன்று 18 முதல் 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.www.nclcil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.12.2022.

(Visited 10045 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 1 =