இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் (ஐ.ஓ.சி.எல்) ஓராண்டு அப்ரண்டீஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பு வெளி யாகி உள்ளது. பிட்டர், எலெக்ட்ரீசியன், எலெக்ட்ரானிக்ஸ், மெக் கானிக், இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக், மெசினிஸ்ட், மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், டேட்டா என்டரி ஆபரேட்டர், சில்லறை விற்பனையாளர் உள்ளிட்ட பிரிவுகளில் 1760 பணி இடங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
சம்பந்தப்பட்ட துறை சார்ந்த படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 31-12-2022 அன்றைய தேதிப்படி, 18 முதல் 24 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயது தளர்வும் உண்டு. ஆன்லைன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்க கடைசி தேதி: 3-1-2023. விண்ணப்பிப்பது பற்றிய மேலும் விரிவான விவரங்களை https:/liocl.com/என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.