இந்திய வனப் பணிக்கான நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் இல வச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்திய வனப் பணியில் காலியாக உள்ள 151 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 5-ஆம் தேதி நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு முதன்மை தேர்வு கடந்த நவம்பர் 20-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், முதன்மை தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (டிச.23) வெளியிடப்பட்டன. அதில், தேர்ச்சி பெற்றவர்கள், நேர்முகத் தேர்வுக்கான விண்ணப்பத்தை அளிப்பது தொடர்பான விவரங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என மத்திய தேர்வாணையம் தெரிவித்துள்ளது. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு சங்கர் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த நேர்முக தேர்வுக்கான பயிற்சி விரும்பும் மாணவர்கள் interview@shankarias.in என்ற மின்னஞ்சலில் அல்லது 63797 84702,90030 73321 ஆகிய கைப் பேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.