நல்லழகம்மை – செல்லப்பன் அறக்கட்டளை தமிழ் மரபுக் கவிதைப் போட்டி நல்லழகம்மை செல்லப்பன் அறக்கட்டளை சார்பில் தமிழ் மரபுக் கவிதைப் போட்டி நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்கும் நூல்கள் 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் வெளியானதாகவும், குறைந்த பட்சம் 100 பக்கங்கள் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
போட்டிக்கு மூன்று படிகள் அனுப்ப வேண்டும். நூல்களை வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதிக்குள் கீழ்கண்ட முகவரியில் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். குழந்தைகளுக்கான நூல்களும் அனுப்பலாம்
. சிறந்த கவிதை நூல்களுக்கு முதற் பரிசு ரூ.10,000/- இரண்டாம் பரிசு ரூ.7,500/- மூன்றாம் பரிசு ரூ.5,000/- வழங்கப்படும். இப்போட்டிக்கான பரிசுத்தொகை 2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சென்னை வாணுவம்பேட்டை திருவள்ளுவர் இலக்கிய மன்ற ஆண்டு விழாவில் வழங்கப்படும். நூல்கள் அனுப்பி வைக்க வேண்டிய முகவரி: ந.செல்லப்பன் G-2, ரங்க விலாஸ், CTS அடுக்ககம், 49-2 ஆவது தெரு, புவனேஸ்வரி நகர், ஆதம்பாக்கம், சென்னை-600088.