அரசு துறையீல் காலி பணி

எஸ்எஸ்சி தேர்வு அறிவிப்பு

ஒன்றிய அரசில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 4500 லோயர் டிவிஷன் கிளார்க் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க ஸ்டாப் செலக்‌ஷன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 4,500.

பணி: 1. Lower Division Clerk/Junior Secretariat Assistant. சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி.

2.    Data Entry Operator/Data Entry Operator (Grade-A): சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் கிரேடு-ஏ பணிக்கு மட்டும் கணிதத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு சலுகை: விண்ணப்பதாரரின் வயது வரம்பு 1.1.2022 தேதிப்படி நிர்ணயிக்கப்படும். எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும். விதவைகள்/விவாகரத்து பெற்றவர்கள் எஸ்சி/எஸ்டி எனில் 45 வயது வரையிலும், இதர பிரிவினர் 35 வயது வரையிலும் தளர்வு அளிக்கப்படும். கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.100/- எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷனால் நடத்தப்படும் Combined Higher Secondary Level ஆன்லைன் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், வேலூர், நெல்லை ஆகிய மையங்களில் நடைபெறும். www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 4.1.2023.

(Visited 1003 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 18 =