உ.பி. மாநிலம், ஆக்ரா ராணுவ வாரியத்தில் காலியாக உள்ள 23 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Tax Collector: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. தகுதி: இன்டர்மீடியட்டுடன் இந்தி டைப்பிங்கில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். சிசிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
2. Sanitary Inspector: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: வேதியியல்/வேளாண்மை/ விலங்கியல் பராமரிப்பு ஆகிய பாடங்களில் பட்டப்படிப்பு மற்றும் சானிட்டரி இன்ஸ்பெக்டர்/ சானிட்டரி ஹெல்த் இன்ஸ்பெக்டர்/ சேனிடேஷன் மற்றும் பொது சுத்தம் பாடங்களில் ஒரு ஆண்டு டிப்ளமோ
3. Motor Attendant: 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1900. தகுதி: மெட்ரிகுலேசனுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் ஐடிஐ.
4. Draughts man: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. தகுதி: இன்டர்மீடியட்டுடன் டிராப்ட்ஸ்மேன் பாடத்தில் சான்றிதழ் அல்லது டிராப்ட்ஸ்மேன் அல்லது ஆர்க்கிடெக்சர் அல்லது ஆர்க்கிடெக்சர் அசிஸ்டென்ட் ஆகிய பாடங்களில் டிப்ளமோ அல்லது சிவில் இன்ஜினியரிங் /டிராப்ட்ஸ்மேன் பாடத்தில் டிப்ளேமா அல்லது சிவில்/மெக்கானிக்கல் பாடத்தில் ஐடிஐ.
5. Lineman: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.
6. Fitter: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. தகுதி: அறிவியல், கணிதம் ஆகிய பாடங்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பிட்டர் டிரேடில் ஐடிஐ.
7. Junior Assistant: 6 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்- 1). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. தகுதி: இன்டர்மீடியட்டுடன் இந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகளும், ஆங்கிலத்தில் 30 வார்த்தைகளும் டைப் செய்ய தெரிந்திருக்க வேண்டும். சிசிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
8. Assistant Teacher: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், மாநில அரசின் டெட் அல்லது ஒன்றிய அரசின் சிடெட் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
9. Steno Typist: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: இன்டர்மீடியட்டுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள், டைப்பிங் வேகம் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் மற்றும் சிசிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
10. Meter Reader: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் எலக்ட்ரிக்கல் டிரேடில் ஐடிஐ.
11. Ward Servant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800. தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சி.
12. Cashier: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900/- தகுதி: இன்டர்மீடியட்டுடன் இந்தியில் 25 வார்த்தைகளும், ஆங்கிலத்தில் 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சிசிசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.chandigarh.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.1000/- (எஸ்சி பிரிவினருக்கு ரூ.500).
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.01.2023.