ஆட்சியர் தகவல்
கோவை, ஜன.16: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு
விமான நிலையத்தில் வாடிக்கையாளர் சேவை பிரிவில் பணியாற்
றுவதற்கான பயிற்சி அளிக்க தாட்கோ நிறுவனம் ஏற்பாடு செய்
துள்ளதாக ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் தாட்கோ நிறுவனம் சார்பில் ஆதிதிராவிடர் மற்
றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் சார்ந்த
பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தற்போது பி.டி.சி. ஏவி
யேஷன் அகதெமி மூலம் விமான நிலையத்தில் விமான வாடிக்கை
யாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில்
பணியாற்றுவதற்கான பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிற்சியை 18 முதல் 25 வயதுக்கு உள்பட்ட இளைஞர்கள்
பெற முடியும். இதற்கு பிளஸ் 2 அல்லது ஏதாவது ஒரு பட்டப்
படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 3 மாத
காலம் பயிற்சி அளிக்கப்படும். தங்கிப் படிப்பதற்கான விடுதி
செலவு, உணவுக் கட்டணம் என ஒரு நபருக்கு ரூ.20 ஆயிரம்
தாட்கோ நிறுவனம் சார்பில் செலவு செய்யப்படுகிறது.
இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்களுக்குAASSC
(Aerospace skill sector council) யால் அங்கீகரிக்கப்பட்ட தரச்
சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சி பெறுபவர்கள் indigo
airlines, spice jet, go first, vistara, air india உள்ளிட்ட புகழ்
வாய்ந்த விமான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர
நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இத்திட்டத்தில் இணைந்து
பயிற்சி பெற தகுதியும், விருப்பமுள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்
குடியின இளைஞர்கள் www.tahdco.com என்ற இணையதளம்
வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்
டுள்ளது.