பணி: உளவியல் உதவி பேராசிரியர் மற்றும் கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட்.மொத்த இடங்கள்: 24 (பொது-3, பெண்கள்-2. மாற்றுத்திறனாளி-1, பிற்பட்டோர் (பொது)-2, பிற்பட்டோர் (பெண்)-2, மிகவும் பிற்பட்டோர்-1, மிகவும் பிற்பட்டோர் (தமிழ் மீடியம்)-1, மிகவும் பிற்பட்டோர் (பெண்)-1, எஸ்சி (தமிழ் மீடியம்)-1, எஸ்சி (பெண்)-1.வயது: 01.7.22 அன்று பொதுப் பிரிவினருக்கு 37க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.கல்வித்தகுதி: உளவியல் பாடத்தில் எம்ஏ அல்லது பி.ஏ. ஹானர்ஸ் அல்லது பிஎஸ்சி ஹானர்ஸ் அல்லது கிளினிக்கல் சைக்காலஜி பாடத்தில் முதுநிலை டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ மற்றும் பெங்களூருவில் உள்ள அகில இந்திய மனநலம் நிறுவனத்தில் மருத்துவம் மற்றும் சமூக உளவியல் பாடத்தில் முதுநிலை டிப்ளமோ.ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைன் தேர்வு சென்னை, மதுரை, கோவை, நெல்லை ஆகிய மையங்களில் நடைபெறும்.மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், தேர்வு பாடத்திட்டம், கட்டணம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.1.2023.
தமிழ்நாடு அரசு மருத்துவத் துறையில் பணியிடங்கள்
(Visited 1004 times, 31 visits today)