இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 596 ஜூனியர் எக்சிக்யூட்டிவ்கள் பணி

இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தில் 596 ஜூனியர் எக்சிக்யூட்டிவ்கள் பணியிடங்களுக்கு பி.இ., படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1.     Junior Executive (Civil Engineering): 62 இடங்கள் (பொது-32, எஸ்சி-9, எஸ்டி-4, ஒபிசி-11, பொருளாதார பிற்பட்டோர்-6). தகுதி: சிவில் பாடத்தில் பி.இ., தேர்ச்சி.

2.     Junior Executive (Electrical Engineering): 84 இடங்கள் (பொது-47, எஸ்சி-6, எஸ்டி-4, ஒபிசி-19, பொருளாதார பிற்பட்டோர்- 8). தகுதி: எலக்ட்ரிக்கல் பாடத்தில் பி.இ., தேர்ச்சி.

3.     Junior Executive (Electronics): 440 இடங்கள் (பொது-187, எஸ்சி-67, எஸ்டி-31, ஒபிசி-111, பொருளாதார பிற்பட்டோர்-44). தகுதி: Technology in Electronics/Telecommunications/Electrical with specialization in Electronics பிரிவில் பி.இ. தேர்ச்சி.

4.     Junior Executive (Architecture): 10 இடங்கள் (பொது-6, எஸ்சி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: Architecture பிரிவில் இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்குமான வயது: 21.1.2023 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

சம்பளம்: ரூ.40,000- 1,40,000. தகுதியானவர்கள் கேட் தேர்வு மதிப்பெண் மற்றும் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர். கேட் 2020/2021/2022ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.300/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது. www.aai.aero என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.1.2023.

(Visited 10024 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 11 =