ஒன்றிய அரசின் மின்சார நிறுவனங்களில் ஒன்றான தேசிய நீர் மின்சார நிறுவனத்தால் நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ள 22 நீர் மின்சார நிறுவனங்களில் பணியாற்ற 401 பயிற்சி இன்ஜினியர்கள் தேவைப்படுகின்றனர்.
பணியிடங்கள் விவரம்:
1. Trainee Engineer (Civil): 136 இடங்கள் (பொது-57, எஸ்சி-20, எஸ்டி-10, ஒபிசி-36, பொருளாதார பிற்பட்டோர்-13) தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.
2. Trainee Engineer (Mechanical): 108 இடங்கள் (பொது-45, பொருளாதார பிற்பட்டோர்- 10, ஒபிசி-29, எஸ்சி-16, எஸ்டி-8). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.இ., தேர்ச்சி.
3. Trainee Engineer (Electrical): 41 இடங்கள் (பொது-20, எஸ்சி-5, எஸ்டி-3, ஒபிசி-10, பொருளாதார பிற்பட்டோர்-3) தகுதி: எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., தேர்ச்சி.
4. Trainee Officer (Finance): 99 இடங்கள். (பொது-41, ஒபிசி-28, எஸ்சி-12, எஸ்டி-9, பொருளாதார பிற்பட்டோர்-9). தகுதி: சிஏ/ஐசிடபிள்யூஏ அல்லது சிஎம்ஏ தேர்ச்சி.
5. Trainee Officer (HR): 14 இடங்கள். (எஸ்சி-1, ஒபிசி-2, பொருளாதார பிற்பட்டோர்-1, பொது-10). தகுதி: மனிதவளம்/ பெர்சனல் மேனேஜ்மென்ட்/ இன்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம்.
6. Trainee Officer (Law): 3 இடங்கள் (பொது). தகுதி: குறைந்தது 60% மதிப்பெண்களுடன் பிஎஸ்/எல்எல்பி. CLAT -2022 தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து பணிகளுக்கும் வயது : 30க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆ்ணடுகளும் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.50,000- 1,60,000.
பயிற்சி இன்ஜினியர் பணிக்கு கேட்-2022 மதிப்பெண் மற்றும் டிரெய்னி ஆபீசர் பணிக்கு கல்வித்தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.295/ இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.
www.nhpcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2023.