பணியிடங்கள்:1. ASI (Stenographer): 143 இடங்கள் (ெபாது-58, பொருளாதார பிற்பட்டோர்-14, ஒபிசி-39, எஸ்சி-21, எஸ்டி-11). சம்பளம்: ரூ.29,200-92,300. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் என்ற வேகத்தில் சுருக்கெழுத்து எழுதி நிமிடங்களுக்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.2. Head Constable (Ministerial): 1315 இடங்கள் (பொது-532, பொருளாதார பிற்பட்டோர்- 132, ஒபிசி-355, எஸ்சி-197, எஸ்டி-99). சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் 35 வார்த்தைகள் அடிக்கும் வேகம் பெற்றிருக்க வேண்டும்.உடற்தகுதி: ஆண்கள் குறைந்த பட்சம் 165 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். பெண்கள் 155 செ.மீ., உயரம் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் 162.5 செ.மீ., உயரமும், பெண்கள் 150 செ.மீ., உயரமும் இருக்க வேண்டும்.மார்பளவு: ஆண்கள் சாதாரண நிலையில் 77 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 82 செ.மீட்டரும் இருக்க வேண்டும். எஸ்டி பிரிவைச் சேர்ந்த ஆண்களின் மார்பளவு சாதாரண நிலையில் 76 செ.மீட்டரும், விரிவடைந்த நிலையில் 81 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.சிஆர்பிஎப் ஆல் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை, டைப்பிங் மற்றும் சுருக்கெழுத்து தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, சேலம், தேனி, திருச்சி, நெல்லை, திருப்பூர், வேலூர் ஆகிய மையங்களில் நடத்தப்படும்.கட்டணம்; ரூ.100/ இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி மற்றும் முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு கட்டணம் கிடையாது.www.crpfindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.1.2023.
ஒன்றிய ரிசர்வ் போலீஸ் படையில் பணி
(Visited 10010 times, 31 visits today)