உத்தரகாண்ட் மாநிலம், ராம்கார் ராணுவ நல வாரியத்தில் காலியாக உள்ள 26 பணியிடங்களுககு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Medical Officer: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.5,400 தகுதி: எம்பிபிஎஸ்சுடன் மருத்துவக்கல்லூரியுடன் கூடிய மருத்துவமனையில் ஓராண்டு பயிற்சி முடித்திருக்க வேண்டும். வயது: 23 முதல் 35க்குள்.
2. Pharmacist: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,800. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ்2 தேர்ச்சியுடன் பார்மசி பாடத்தில் டிப்ளமோ அல்லது 1994ம் ஆண்டுக்கு முன் எஸ்எஸ்எல்சியுடன் பார்மசி பாடத்தில் டிப்ளமோ தேர்ச்சி அல்லது பார்மசி பாடத்தில் பட்டப்படிப்பு. வயது: 21 முதல் 30க்குள்.
3. Assistant Computer Programmer: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200. தகுதி: எம்சிஏ அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தகவல் தொழில்நுட்ப பாடத்தில் பி.இ.,/பி.டெக் அல்லது கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பாடத்தில் முதுநிலை டிப்ளமோவுடன் பட்டப்படிப்பு. வயது: 21 முதல் 30க்குள்.
4. Sanitary Inspector: 1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: வேதியியல்/வேளாண்மை/ விலங்கு பாதுகாப்பு ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் பி.எஸ்சி., மற்றும் சுகாதாரம் மற்றும் பொது சுத்தம் பாடத்தில் டிப்ளமோ. வயது: 21 முதல் 35க்குள்.
5. Assistant Teacher: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: 50% தேர்ச்சியுடன் பிளஸ்2 தேர்ச்சி மற்றும் தொடக்கக் கல்வியில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது 45% தேர்ச்சியுடன் பிளஸ் 2 மற்றும் தொடக்கக் கல்வியில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது 50% தேர்ச்சியுடன் பிளஸ் 2 மற்றும் 4 ஆண்டு பி.எட் படிப்பு அல்லது 50% தேர்ச்சியுடன் பிளஸ்2 சிறப்பு கல்வி பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது பட்டப்படிப்புடன் தொடக்கக் கல்வி பாடத்தில் 2 ஆண்டு டிப்ளமோ அல்லது 50% தேர்ச்சியுடன் பட்டப்படிப்பு அல்லது அதற்கு சமமான தகுதி மற்றும் ஓராண்டு பி.எட்., அல்லது சிறப்பு கல்வி பாடத்தில் 2 ஆண்டு பிஎட்., மற்றும் மாநில அரசின் டெட் அல்லது ஒன்றிய அரசின் சிடெட் ஆகிய தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: பொது பிரிவினருக்கு 21 முதல் 30க்குள். எஸ்டியினருக்கு 21 முதல் 35க்குள்.
6. Lower Division Clerk: 1 இடம். (பொது). தகுதி: பிளஸ்2 தேர்ச்சியுடன் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900. வயது: 21 முதல் 30க்குள்.
7. Electrician: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல் பாடத்தில் ஐடிஐ அல்லது எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ. வயது: 21 முதல் 30க்குள்.
8. Mid-wife: 1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400. தகுதி: 45% மதிப்பெண்களுடன் மெட்ரிக்குலேசன் தேர்ச்சி. ஏஎன்எம் பயிற்சி 18 மாதங்கள் பெற்றிருக்க வேண்டும். வயது: 21 முதல் 35க்குள்.
9. Safai-Mazdoor: 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1800. தகுதி: மெட்ரிக்குலேசன் தேர்ச்சி. வயது: பொது பிரிவினருக்கு 21 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டியினருக்கு 21 முதல் 35க்குள்.
10. Safaiwala: 14 இடங்கள். (பொது-6, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்டி-4, எஸ்சி-1, பிற்பட்டோர்-2). தகுதி: மெட்ரிக்குலேசன் தேர்ச்சி. சம்பளம்: ரூ.5,200- 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1800. வயது: பொது மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிற்பட்டோருக்கு பிரிவினருக்கு 21 முதல் 30க்குள்.
மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://ramgarh.cantt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.1.2023.