இந்திய ராணுவத்தின் கீழ் இயங்கும் எல்லை சாலைகள் நிறுவனத்தில் 567 டிரைவர், மெக்கானிக் பணியிடங்கள் காலியாக உள்ளன.பணியிடங்கள் விவரம்:1. Radio Mechanic: 2 இடங்கள் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோ மெக்கானிக் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம்.
சம்பளம்: ரூ.25,500-81,100. வயது: 18 முதல் 27க்குள்.2. Operator Communication: 154 இடங்கள் (பொது-62, எஸ்சி-25, எஸ்டி-9, ஒபிசி-43, பொருளாதார பிற்பட்டோர்-15). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வயர்லெஸ் ஆபரேட்டர்/ரேடியோ மெக்கானிக் டிரேடில் ஐடிஐ. வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.3. Driver Mechanical Transport (Ordinary Grade): 9 இடங்கள் (பொது-4, எஸ்சி-3, ஒபிசி-2). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 27க்குள்.
சம்பளம்: ரூ.19,900- 63,200.4. Vehicle Mechanic: 236 இடங்கள் (பொது-119, எஸ்சி-36, எஸ்டி-14, ஒபிசி-44, பொருளாதார பிற்பட்டோர்-23). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Motor Vehicle Mechanic/Diesel Mechanic/Heat Engine Mechanic டிரேடில் ஏதாவது ஒன்றில் ஐடிஐ. வயது: 18 முதல் 27க்குள். சம்பளம்: ரூ.19,900-63,200.5. Multi Skilled Worker (Driller): 11 இடங்கள் (பொது-4, எஸ்டி-1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எல்லை சாலைகள் நிறுவனத்தால் நடத்தப்படும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.18,000-56,900.6. Multi Skilled Worker (Mason): 149 இடங்கள் (பொது-52, எஸ்சி-26, எஸ்டி-5, ஒபிசி-52, பொருளாதார பிற்பட்டோர்- 14). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் மேசன் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.18,000-56,900.7. Multi Skilled Worker (Painter): 5 இடங்கள் (எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-2). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பெயின்டர் டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.18,000-56,900.8. Multi Skilled Worker (Mess Waiter): 1 இடம் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எல்லை ரோடுகள் நிறுவனத்தின் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வயது: 18 முதல் 25க்குள். சம்பளம்: ரூ.18,000-56,900.எல்லை ரோடுகள் நிறுவனத்தின் சார்பில் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோர் ஆகிய பிரிவினர் மட்டும் ரூ.50 ஐ ஸ்டேட் வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்தவும்.மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.bro.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2023.