பணி: Road Inspector. மொத்த இடங்கள்: 761.சம்பளம்: ரூ.19,500-71,900.வயது: 11.2.2023 அன்று 37 வயதிற்குள். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மிகவும் பிற்பட்டோர்/பிற்பட்டோர்/ முஸ்லிம்/ ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.தகுதி:
சிவில் டிராப்ட்ஸ்மேன் பாடத்தில் ஐடிஐ அல்லது சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். தமிழில் நன்றாக எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்ெதடுக்கப்படுவார்கள்.
சென்னை, கோவை, சிதம்பரம், காஞ்சிபுரம், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி, உதகமண்டலம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், காரைக்குடி, தஞ்சை, திருச்சி, வேலூர் ஆகிய மையங்களில் நடைபெறும்.கட்டணம்: தேர்வுக் கட்டணம் ரூ.100/- பதிவுக் கட்டணம் ரூ.150/-.
இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.2.2023.