தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையில் 93 காலி பணியிடங்கள்

தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையில் 93 அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Agricultural Officer (Extension): 37 இடங்கள். சம்பளம்: ரூ.37,700- 1,38,500. வயது; பட்டதாரிகளுக்கு 32க்குள், முதுநிலை பட்டதாரிகளுக்கு 34 வயதிற்குள். தகுதி: Agriculture பாடத்தில் இளநிலை பட்டம். முதுநிலை பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

2. Assistant Director of Agriculture: (Extension): 8 இடங்கள். சம்பளம்: ரூ.56,100-2,05,700. வயது; 32க்குள். தகுதி: Agricultural Extension/Agricultural Economics பாடங்கள் ஏதாவது ஒன்றில் எம்.எஸ்சி.,

3. Horticulture Officer: 48 இடங்கள். சம்பளம்: ரூ.37,700-1,38,500. வயது: பட்டதாரிகள் 32க்குள்ளும், முதுநிலை பட்டதாரிகள் 34 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். தகுதி: Horticulture பாடத்தில் பிஎஸ்சி. எம்எஸ்சி பட்டம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

வயது வரம்பு: விண்ணப்பதாரரின் வயது வரம்பானது 1.7.2023ன்படி கணக்கிடப்படும். பொதுப்பிரிவினர் தவிர மற்ற பிரிவினர்களான எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/ மிகவும் பிற்பட்டோர்/பிற்பட்டோர்/ முஸ்லிம் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் எழுத்துத் தேர்வு நடைபெறும். 1 முதல் 10ம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக படித்தவர்கள், தமிழில் நன்றாக பேச, எழுத தெரிந்திருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.150/-. தேர்வு கட்டணம் ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது.

www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.02.2023.

(Visited 10027 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + nine =