என்சிசி பயிற்சி பெற்றவர்கள் இந்திய ராணுவத்தில் லெப்டினென்ட்டாக சேர அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
பணி: Lieuteneant (NCC Special Entry): ஆண்கள்-50 இடங்கள். (இதில் 5 இடங்கள் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது). பெண்கள்- 5 இடங்கள். (இதில் 1 இடம் போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு உரியது).
சம்பளம்: ரூ.56,100-1,77,500.
வயது வரம்பு; 1.7.2023 அன்று 19 முதல் 25க்குள்.
தகுதி: இளநிலை பட்டம் பெற்று என்சிசியில் 2 வருட பணி அனுபவம் பெற்று ‘சி’ சான்று பெற்றிருக்க வேண்டும். போரில் இறந்த ராணுவ வீரர்களின் வாரிசுகள் இளநிலைப் பட்டம் பெற்றிருந்தால் போதும்.
உடற்தகுதி: ஆண்கள்- உயரம்: 157 செ.மீ., பெண்கள்- உயரம்: 152 செ.மீ., எடை: 42 கிலோ
உடற்திறன் தேர்வு: 2.4 கி.மீ., தூரத்தை 15 நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க வேண்டும். சிட்அப்ஸ்- 25, புஷ்அப்ஸ்-13, சின்அப்ஸ்-6 மற்றும் 3-4 மீட்டர் உயரம் கயிறு ஏறும் திறன் பெற்றிருக்க வேண்டும்.உடற்தகுதி, உடற்திறன் தேர்வு, மருத்துவ பரிசோதனை மற்றும் எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அலகாபாத், போபால், பெங்களூரு, கபூர்தாலா ஆகிய மையங்களில் நடைபெறும்.
www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.2.2023.