சென்னை ராணுவ நல வாரியத்தில் காலியாக உள்ள 28 பணி

சென்னை பல்லாவரம் ராணுவ நல வாரியத்தில் காலியாக உள்ள 28 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:
1.     Lower Division Clerk: 1 இடம் (பொது). தகுதி: ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் ஆங்கிலம் அல்லது தமிழ் அல்லது இந்தி டைப்பிங்கில் லோயர் கிரேடு தேர்ச்சி. சம்பளம்: ரூ 19,500-62,000.
2.     Secondary Grade Assistant Teacher: 4 இடங்கள். (பொது-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1, மாற்றுத்திறனாளி-1). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ெதாடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி படிப்பில் 2 ஆண்டு டிப்ளமோ மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி. சம்பளம்: ரூ 20,600-65,500
3.     Plumber: 1 இடம் (பொது). தகுதி: பிளம்பர் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டுக்கு குறையாமல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுக்கு குறையாமல் பிளம்பிங் தொழிலில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ 19,500-62,000.
4.     Mason: 1 இடம் (பொது). தகுதி: மேசன் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டுக்கு குறையாமல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் கட்டிட தொழிலாளியாக பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ 19,500- 62,000.
5.     Electrical Helper: 1 இடம் (பொது). தகுதி: எலக்ட்ரீசியன் அல்லது வயர்மேன் டிரேடில் ஐடிஐ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டுக்கு குறையாமல் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ 18,200-57,900.
6.     Midwife: 1 இடம் (பொது). தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் ஏஎன்எம் படிப்பு அல்லது மல்டி பர்போஸ் ஹெல்த் வொர்க்கர்ஸ் படிப்பில் தேர்ச்சி மற்றும் இந்தியன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். சம்பளம்: ரூ 19,500-62,000.
7.     Nursing Orderly: 1 இடம் (முன்னாள் ராணுவத்தினர்). தகுதி: எஸ்எஸ்எல்சி தேர்ச்சியுடன் நர்சிங் உதவியாளர் பயிற்சி படிப்பில் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ரூ 15,900-50,400.
8.     Ayah: 2 இடங்கள் (பொது-1, ஓபிசி-1). தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. சம்பளம்: ரூ 15,700-50,000.
9.     Latchi: 1 இடம் (பொது). தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. சம்பளம்: ரூ 15,700-50,000.
10.     Watchman: 5 இடங்கள். (பொது-3, ஓபிசி-1, முன்னாள் ராணுவத்தினர்-1). தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி. முன்னாள் ராணுவத்தினராக இருக்க வேண்டும் அல்லது 2 ஆண்டுகளுக்கு குறையாமல் ஏதாவது ஒரு நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றியிருக்க வேண்டும்.
11.     Safaiwala: 10 இடங்கள் (பொது-3, ஓபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1, எஸ்டி-1, முன்னாள் ராணுவத்தினர்-1, மாற்றுத்திறனாளி-1). தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.

வயது: பொது மற்றும் பொருளாதார பிற்பட்டோர்- 21 முதல் 30க்குள். ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு https://stm.cantt.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:
15.02.23.

(Visited 10049 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × five =