இந்தியா முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் காலியாக உள்ள 40,889 Gramin Dak Sevak பணிகளுக்கு 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாடு தபால் துறையில் 3167 காலியிடங்கள் உள்ளன.
பணி: Gramin Dak Sevaks.
மொத்த இடங்கள்: 3167.
கிராமின் டக் சேவக்குகள் பணியின் கீழ் 3 வகையான பணிகளுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பணியிடங்கள் விவரம் வருமாறு:
1. Branch Post Masters (BPM): தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் தபால் நிலை பொறுப்பாளராக அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். அதாவது பொதுமக்களுக்கு தபால் துறை சேவைகள் வழங்குவது, பைல்கள் மற்றும் ரிக்கார்டுகளை கையாள்வது, தபால் துறையின் கீழ் செயல்படும் போஸ்ட் பேமென்ட் தொடர்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். சம்பளம்: ரூ.12,000- 29,380.
2. Assistant Branch Post Master (ABPM): தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஸ்டாம்புகள், ஸ்டேஷனரி பொருட்களை விற்பனை செய்வது, வாடிக்கையாளரின் இருப்பிடத்துக்கே சென்று தபால்களை பட்டுவாடா செய்வது, தபால்களை புக்கிங் செய்து பணி பரிவர்த்தனைகளை மேற்கொள்வது ஆகிய பணிகளை செய்்ய வேண்டும். சம்பளம்: ரூ.10,000-24,470.
3. Dak Sevak: தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். தபால் துறை பணிகளில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் ஆகியோருக்கு உதவி செய்ய வேண்டும். பிளஸ் 2 வில் கம்ப்யூட்டரை ஒரு பாடமாக படித்தவர்கள் தனியாக கம்ப்யூட்டர் பயிற்சி பெற்றிருக்க வேண்டியதில்லை.
காலியிடங்கள் விவரம் தபால் நிலையம் வாரியாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று பணிகளுக்கும் 16.2.23 அன்று 18 முதல் 40க்குள்.
10ம் வகுப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதுபற்றிய தகவல் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். தகவல் கிடைத்த 30 நாட்களுக்குள் கீழ்க்கண்ட ஏற்பாடுகளை விண்ணப்பதாரர்கள் செய்ய வேண்டும்.
1. குறைந்தது 100 சதுர அடி பரப்பில் கம்ப்யூட்டர் வசதி, இன்டர்நெட் வசதி, மின் இணைப்புடன் கூடிய கட்டிடத்தை ஜிடிஎஸ் தபால் அலுவலகமாக இயக்குவதற்கு சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ தயார் செய்ய வேண்டும்.
2. கட்டிடம் தரை தளத்தில் ஊரின் முக்கிய பகுதியில் அமைந்திருக்க வேண்டும்.
3. கட்டிடம் மத்திய அல்லது மாநில அரசுக்கு சொந்தமான கட்டிடமாக இருப்பது விரும்பத்தக்கது. பணி நியமனம் செய்யப்படுபவர்்்்்்்்்்கள் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமத்திலோ வசிப்பவராக இருக்க வேண்டும்.
4. சைக்கிள்/ இரு சக்கர வாகனம் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினர்/மாற்றுத் திறனாளிகள்/திருநங்கைகள்/ பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. www.indiapostgdsonline.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.2.2023