மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் (Central Industrial Security Force) காலியாக உள்ள 451 கான்ஸ்டபிள் இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. Constable (Driver): 183 இடங்கள் (பொது-76, எஸ்சி-27, எஸ்டி-13, ஒபிசி-49, பொருளாதார பிற்பட்டோர்-18).
2. Constable (Driver cum pump Operator): 268 இடங்கள். (பொது-111, எஸ்சி-40, எஸ்டி-19, ஒபிசி-72, பொருளாதார பிற்பட்டோர்- 26).
மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது: 22.02.23 தேதியின்படி 21 லிருந்து 27க்குள். அதிகபட்ச வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக மற்றும் இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் HMV/LMV/Motor Cycle with Gear பிரிவில் 3 வருடம் ஓட்டுநராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதி: எஸ்சி/ஒபிசி மற்றும் பொதுப் பிரிவினருக்கு உயரம் 167 செ.மீ., மார்பளவு விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., விரிவடையாத நிலையில் 80 செ.மீ இருக்க வேண்டும். எஸ்டி பிரிவினருக்கு உயரம் 160 செ.மீ., மார்பளவு விரிவடைந்த நிலையில் 81 செ.மீ.யும், சாதாரண நிலையில் 76 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.
தகுதியானவர்கள் HBT/PST/PET தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.100/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
www.cisfrectt.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.02.2023.