திருச்சியிலுள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள 52 இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Junior Assistant: 6 இடங்கள் (பொது-3, ஓபிசி-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ. 5,200-20,200. வயது: 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கில டைப்பிங்கில் 35 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். கம்ப்யூட்டர் மற்றும் சுருக்கெழுத்து திறன் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
2. Senior Assistant: 3 இடங்கள் (பொது-1, ஓபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ. 5,200-20,200. வயது: 33க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும். சுருக்கெழுத்து, கம்ப்யூட்டர் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
3. Office Attendant/Lab Attendant: 22 இடங்கள் (பொது-11, ஓபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-2). சம்பளம்: ரூ.5,200-20,200. வயது: 27க்குள். தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி. லேப் அட்டெண்டென்ட் பணிக்கு அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. Technical Assistant: 9 இடங்கள் (பொது-5, ஓபிசி-2, எஸ்சி-2). சம்பளம்: ரூ.9,300-34,800. வயது: 30க்குள். தகுதி: 50% மதிப்பெண்களுடன் ஏதேனும் பி.இ.,/பிடெக் அல்லது எம்சிஏ அல்லது பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் தேர்ச்சி.
5. SAS Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.9,300-34,800 வயது: 30க்குள். தகுதி: உடற்கல்வி பாடத்தில் பட்டப்படிப்பு மற்றும் கல்லூரியில் நடைபெறும் Event Management நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
6. Library & Information Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ. 9,300-34,800. வயது: 1.3.2023க்குள் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்புடன் நூலக அறிவியல் பாடத்தில் பட்டம். PGDCA படித்திருப்பது விரும்பத்தக்கது.
7. Technician: 10 இடங்கள் (பொது-2, எஸ்சி-2, ஓபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-1). வயது: 27க்குள். சம்பளம்: ரூ. 5,200-20,200. தகுதி: அறிவியல் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
8. Senior Technician: 5 இடங்கள் (பொது-2, எஸ்சி-1, ஓபிசி-1, எஸ்டி-1). வயது: 33க்குள். சம்பளம்: ரூ. 5,200-20,200. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஐடிஐ தேர்ச்சி அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ இன்ஜினியரிங் தேர்ச்சி. இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
: பொது/பொருளாதார பிற்பட்டோர்/ ஓபிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டியினருக்கு ₹500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
1.3.2023 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரி பார்த்தல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://recruitment.nitt.edu/group ABC என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.03.2023.