ஏர்-இந்தியாவில் 370 இடங்கள் :ஐ





மகாராஷ்டிரா, மும்பையில் ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 370 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐடிஐ/டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.பணியிடங்கள் விவரம்:1. Aircraft Technician (Maintenance & Overhaul Shops): 198 இடங்கள். சம்பளம்: ரூ.25,000. வயது: 1.3.2023 தேதியின்படி 35க்குள். தகுதி: Aircraft Maintenance Engineering பாடத்தில் டிப்ளமோ முடித்து ஒரு வருட Aircraft Maintenance Technician பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Mechanical/Aeronautical இன்ஜினியரிங்கில் 3 வருட டிப்ளமோ முடித்து Aircraft Maintenance துறையில் ஒரு வருட அப்ரன்டிஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.2. Aircraft Technician (Avionics): 97 இடங்கள். சம்பளம்: ரூ.25,000. வயது: 35க்குள். தகுதி: Aircraft Maintenance Engineering பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்து ஒரு வருடம் Aircraft Maintenance பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Electrical/Electronics/Telecommunication/Radio/Instrumentation பாடங்கள் ஏதாவது ஒன்றில் 3 வருட இன்ஜினியரிங் படிப்பை முடித்து Aircraft Maintenance துறையில் அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.3. Technician: 74 இடங்கள். (Fitter & Sheet Metal-31, Painter-12, Tailor/Upholstery-14, Welder-1, Draughtsman-Mech-1, Electrical/Electronics-10, Carpenter-2, Mechanical Refrigeration Air Condition-2, Mechanical Motor Vehicle-2) சம்பளம்: ரூ.25,000. வயது: 35க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் காலியிடங்கள் ஏற்பட்டுள்ள டிரேடுகளில் ஐடிஐ படிப்பை முடித்து Avionics துறையில் ஒரு வருட பணி அனுபவம் அல்லது சம்பந்தப்பட்ட டிரேடில் 2 வருட பணி அனுபவம்.

வயது: 1.03.2023 தேதியின்படி கணக்கிடப்படும். எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினருக்கு ₹500/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.aiesl.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.03.2023.





நன்றி Amarujala

(Visited 10016 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =