ஆயுத தொழிற்சாலையில் 5395 அப்ரன




பயிற்சி: Trade Apprentice. மொத்த காலியிடங்கள்: 5395 (ஐடிஐ படித்தவர்களுக்கு 3508 இடங்களும், ஐடிஐ அல்லாதவர்களுக்கு 1887 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன).

ஐடிஐ விண்ணப்பதாரர்களுக்கு தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் தொழிற்பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

ஐடிஐ அல்லாத விண்ணப்பதாரர்களுக்கு தகுதி: குறைந்தது 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி அல்லது குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி.

வயது: ஐடிஐ பிரிவினருக்கு- 15 முதல் 24 வயதிற்குள்ளும், ஐடிஐ அல்லாதோருக்கு 15 முதல் 22 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி அதிக பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

பயிற்சியளிக்கப்படும் டிரேடுகள்: Machinist/Fitter/Turner/Welder/(Gas & Electric)/Painter/Carpenter/Electrician/Mason/Electroplater/Mechanic (Tool Maintenance)/Foundryman/Boiler Attendant/Chemical Plant Operator/ A/C Mechanic/ Tool & Die Maker/Electric Fitter.

ஐடிஐ/ ஐடிஐ அல்லாத பிரிவுகளுக்கு ஆயுத தொழிற்சாலை வாரியாக உள்ள காலியிடங்கள் விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு/ பிளஸ் 2/ ஐடிஐ படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். Fresher Categoryக்கு 2 வருடங்கள் பயிற்சி வழங்கப்படும். ஐடிஐ முடித்தவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். உதவித் தொகையாக 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம், பிளஸ் 2 மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.

கட்டணம்: ரூ.200/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு ரூ.100/-.

கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்கள், ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள், பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.03.2023.





நன்றி Amarujala

(Visited 10019 times, 31 visits today)

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 1 =